ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்றார். வரலாற்று ஆசிரியர் மதியழகன் மகளிர் தின சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.