ஆவுடையார் கோவிலில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்

ஆவுடையார் கோவிலில் மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தினை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஒப்பாரி வைத்து சிலிண்டரை சுடுகாட்டிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலில் அடியார் குல தென்கரையில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு நாளும் கேஸ் சிலிண்டரின்னுடைய விலை விஷம்போல் ஏறுவதை கண்டித்து, கேஸ் சிலிண்டருக்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து,ஒப்பாரி வைத்து அழுது சிலிண்டரை சுடுகாட்டிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றிய தலைவர் அமுதா தலைமை தாங்கினார். ஒன்றி செயலாளர் நாகூர் அம்மாள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் சுசீலா, மாவட்ட செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மோடி பிரதமராக பதவி ஏற்கும் பொழுது 650 ரூபாய் இருந்த கேஸ் சிலிண்டர் விலை இப்பொழுது 1150 ரூபாய் என்று இரண்டு மடங்காக உயர்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தவித்து வருவதாகவும், இனிமேல் பெட்ரோல் டீசல் கேஸ் போன்றவற்றின் விலையை ஏற்ற கூடாது என்றும் ஏற்றப்பட்ட விலையை குறைக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கேஸ் சிலிண்டரை சுடுகாட்டிற்கு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 41 = 46