புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறந்தாங்கி மீமிசல் செல்லும் சாலையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், அதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரை அதே ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த எம்.எஸ் கே.பழனி,ஸ்ரீராம், தீபக்,சந்தான பிச்சை ஆகிய மூவரும் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி மாணிக்கம் என்பவர் உயிருக்கு போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார், அவரை தாக்கிய நபர்கள் மூவர் மீது ஆவுடையார்கோவில் காவல்துறையினர்.வழக்கு பதிவு செய்தும் அந்த குற்றவாளி மூவரையும் காவல்துறையினர் இன்று வரை கைது செய்யவில்லை அதேபோல் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி இன்று காலை 10 மணி அளவில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு வந்த அறந்தாங்கி டி.எஸ்.பி தினேஷ்குமார் மற்றும் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டமக்களை அழைத்து பேசினார், முதலில் சாலை மறியலை கைவிட மறுத்த அவர்கள் ஐந்து தினங்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக வாக்குறுதி அளித்ததின் விளைவாக மறியலை கைவிட்டு களைந்து சென்றனர், இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.