புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த 6.01. 2020 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.அவர்களுடைய பெயர்கள் அழகிய பெயர் பலகை திறக்கப்படாமல் இருந்தது.

இன்று பிற்பகல் 11 மணி அளவில் ஊராட்சி மன்றதலைவர்கள் முன்னிலையில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் உமாதேவி ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயர்கள் அடங்கிய பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி சால்வையும் அணிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.