ஆவுடையார்கோவில் ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கி அதை அதே இடத்தில் பரிசீலித்து அது சம்பந்தப்பட்டதுறை சார்ந்த அதிகாரிகளிடம் குன்னூர் ஊராட்சியை சேர்ந்த மக்களின் குறைகளை மின்சாரத்துறை, கால்நடை, விவசாயம் ,பொதுப்பணித்துறை,வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்டஅதிகாரிகளிடம் உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கூறினார்.
இதில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ் .வட்டார வளர்ச்சி ஆணையர் தமிழ்ச்செல்வன் மற்றும் வழக்கறிஞர் விஸ்வநாதன், கூடலூர் முத்து நிலையூர் சரவணன், கிருபாகரன், அம்பலவானந்தல் சுப்ரமணியன்.அசாருதீன் தன்ராஜ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்உட்பட 200-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.