ஆவுடையார்கோவில் அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ்புண்ணியவயல் அடுத்த எழுநூற்றிமங்கலம் கிராமத்தில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுஇந்த நிகழ்வில் புன்னகை அறங்காவலர், இயற்கை விவசாயி அப்பாசாமி தலைமையில், புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே.கலைபிரபு, புண்ணியவயல்ஊராட்சி மன்றஉறுப்பினர் 7வது வார்டு ஜெயந்திமுத்து கருப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பழனியப்பன், முத்துகருப்பன், ஆறுமுகம், துரை என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், புன்னகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர்கலைப் பிரபு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பனைவிதைகளையும்,மரக்கன்றுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.