புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, திருப்புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மன்மத சுவாமி கோவில் காமன் பண்டிகையை முன்னிட்டு தெய்வத்திரு ராசுபிள்ளை நல்லாசியுடன் 3ஆம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
ஆவுடையார் கோவில் தாலுகா, திருப்புனவாசல் ஸ்ரீ மன்மத சுவாமி கோவில் காமன் பண்டிகையை முன்னிட்டு மண்டகப்படி காரர்கள், ஸ்ரீ தர்ம சாஸ்தா நற்பணி மன்றம் மற்றும் திருப்புனவாசல் சேகரம் கிராமத்தார்கள் இணைந்து நடத்திய மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்ற பந்தயத்தில் 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற இரட்டை மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாருக்கு ரொக்க பணம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மற்றும் கேடயம், ஆட்டுக்கிடாய் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருப்புனவாசல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.