புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே பில்லுவலசை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேள்வரை ஊராட்சியில் உள்ள பில்லுவலசை கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் செய்து வந்த நிலையில் காலை 9 மணியளவில் சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு குடமுழக்கு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டை பில்லுவலசை கிராமத்தினர் மற்றும் இக்கோயிலைச் சார்ந்தவர்களும் செய்திருந்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.