ஆவுடையார்கோவில் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே தச்சமல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ விநாயகமூர்த்தி, ஸ்ரீ கருப்பர் சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்பு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் கலந்துக்கொண்டு சென்றனர்.

 ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சமல்லி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த மூன்று நாட்களாக யாக சாலை வளர்க்கப்பட்டு புனித நீரை சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 1