ஆவுடையார்கோவில் அருகே சாமி கும்பிடுவதில் இரு தரப்புகள் இடையே இருந்த பிரச்சனையில் மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, இருமாநாடு அருகே ஆலத்திமனை கிராமத்தில் சாமி கும்பிடுவதில் இரு தரப்புகள் இடையே இருந்த பிரச்சனையில் மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, இரு மாநாடு அருகே ஆலத்திமனை மற்றும் நல்லிக்குடி கிராமங்கள் உள்ளன. இதில் ஆலைத்திமனை கம்மாய் கரையில் ஸ்ரீ ஆகாச வெள்ளை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை நல்லிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி கடந்த 25 ஆண்டுகளாக திருவிழா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆலத்திமனை கிராம எல்லைக்குள் பிள்ளையார் கோவில் இருப்பதால் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும் கடந்த 15 ஆண்டுகளாக திருவிழா நடத்தி வந்துள்ளார்கள் .இரு தரப்புகளுக்கும் இடையே சாமி கும்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த ஓர் ஆண்டாக விநாயகர் கோயில் பூட்டியே கிடந்தது.

இதில் ஆழத்திமனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்பொழுது விசாரணைக்கு வந்தது. அதில் ஆழத்திமனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 02-ஆம் தேதி அன்றும் நல்லிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்றும் திருவிழா நடத்திக் கொள்ளலாம் என்று மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கவே முதல் தரப்பு கால அவகாசம் இல்லாததால் திருவிழா நடத்துவதை கைவிட்டு விட்டது. இரண்டாவது தரப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திருவிழாவை நடத்தினார்கள். திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை நடத்தினார்கள். அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி டிஎஸ்பி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − 54 =