புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில்முன்னாள் மாணவர் பொங்கள் பரிசாக இன்று அச்சு பகர்ப்பு இயந்திரம் வழங்கிய நிகழ்வு நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான தென்றல் நீலகண்டன் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் ₹30000 மதிப்புள்ள அச்சு பகர்ப்பு நகல் இயந்திரத்தை வழங்கி தந்தார்கள், இதனை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின்,கணினி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் பள்ளியின் சார்பாக பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் முருகேசன்,தென்றல் சக்தி , அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.