புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் துறையினர் ரோந்து சென்ற போது செங்கானம் ஊராட்சியில் உள்ள மேல வசந்தனூர் எனும் கிராமத்தில் இரண்டு டிராக்டர்களை திருப்புனவாசல்காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
இதில் செங்காணம் கிராமத்தை சேர்ந்த ஹிட்லர் என்பவருடைய டிராக்டரும் கீழ வசந்தனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவருடைய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது, அதில் தலா ஒரு யூனிட் மணல் இருந்தது அது பறிமுதல் செய்யப்பட்டு திருப்புனவாசல் காவல் நிலையத்தில்வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிட்லர், சுப்பையா இருவரையும் வழக்குப்பதிவு செய்து திருப்புனவாசல் காவல் துறையினர் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், இரண்டு டிராக்டர்களையும் திருப்புனவாசல் காவல் துறையினர் விரட்டி பிடித்து பறிமுதல் செய்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டுகின்றனர்.