புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில்குடிநீர்,கழிப்பறை, சுகாதாரம் தன் சுத்தம் ,மாதவிடாய் சுகாதாரம்மற்றும் ஊட்டச்சத்து ஆகிய ஐந்து கண்களின் சுகாதார நலக்குழு தன்னார்வலர்கள் 50 நபர்களுக்கு பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் கிராமாலயா தொண்டு நிறுவனம் இணைந்து தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார மையசிறப்பு பயிற்சியாளர்கள் கனகா ,கரோலின் மேரி,மரிய அனிட்டா,ஆகியோர் தலைமை தாங்கினர்,கிராமாலயாவின் தொழில்நுட்ப அலுவலர் சிவனேசன் முன்னிலை வகித்தார்,தொடக்கத்தில் எங்கு இலட்சியம் இருக்கிறதோ அங்கு தொலைநோக்கு பார்வை இருக்கும் என்ற பாடல் மூலம் பயிற்சி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிராமாலயாவின் நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரனின் 36 வருட பயணங்களும் சாதனைகளும் விளக்கப்பட்டன,நிகழ்ச்சியில் சுகாதாரத்தின் முக்கிய கூறுகளும் கிராம அளவில் செய்த பல்வேறு சாதனைகளையும் கூறினார்கள்,மேலும்மாதவிடாய் சுகாதாரத்தினை பற்றிபழனிச்செல்வி கூறினார், ஊட்டச்சத்து விழிப்புணர்வு பற்றிசத்யா கூறினார், மேலும் பயிற்சியாளரை மகிழ்விக்க சுகாதார பாடல்களை பாடினார்,சுகாதார நலக்குழு தன்னார்வலர்களுக்கு கிராமாலயாவின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பழனிச்செல்வி நன்றி உரை நிகழ்த்தினார், இறுதியில் சுகாதார நலக்குழு தன்னார்வலர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.