ஆவுடையார்கோவிலில் தனது பிறந்தநாளன்று பெண் தூக்கிட்டு சாவு

ஆவுடையார் கோவிலில் தனது பிறந்தநாளில் பெண் தூக்கிட்டு மரணம். கொலையா? அல்லது தற்கொலையா ? என்ற கோணத்தில் ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, பொன்பேத்தி அருகே கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்நத தனிஸ்லாஸ் (60), புஷ்பமேரி (57) இவர்களின் மூன்றாவது மகள் ரஞ்சனா (25). இவர் பிஎஸ்சி, பிஎட் படித்துவிட்டு ஆவுடையார் கோவில் தனியார் ஜெராக்ஸ் கடையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாள். ஆவுடையார்கோவில் ஆனி தேரோட்டம் நடந்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் ரஞ்சனா தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது அவர் வீட்டின் உத்தரத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார். வெளியில் சென்று வீடு திரும்பிய ரஞ்சனா தாயார் புஷ்பா மேரி மற்றும் அருகில் உள்ளவர்கள் உள்ளே ரஞ்சனா பிணமாக தொங்குவதை பார்த்து கதறியவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று ரஞ்சனாவை இறக்கி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரஞ்சனா இறந்துவிட்டதாக கூறவே இன்று ரஞ்சனாவின் சடலம், உடற்கூராய்வுக்கு பிறகு அவருடைய உடலை அவரது சொந்த ஊரான கொத்தமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச்சென்று நல்லடக்கம் செய்துள்ளனர். பிஎஸ்சி, பிஎட் முடித்த ரஞ்சனா மரணம் அவரது பிறந்த நாளான நேற்று நடந்துள்ளதால் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 4 =