ஆவுடையார்கோயில் அருகே வங்கநகரம் ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

ஆவுடையார்கோயில் அருகே வங்கநகரம் ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்ஆவுடையார் கோவில் அருகே வங்க நகரம்ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிகார மூர்த்திகள் திருக்கோவில்  அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. இதற்கென சிறப்பான யாகசாலை அமைத்து வெள்ளிக்கிழமை முதற்கால யாக பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று நான்காம் காலயாக பூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது மேளதாளங்களுடன் கோவிலை சுற்றி வலம் வந்தபின் கோபுர கலசத்தை அடைந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வங்கநகரம் கிராமத்தார்கள் மற்றும் ஒப்பரைதாரர்கள் இளைஞர் நற்பணி மன்றம்  சுற்றுவட்டார ஆன்மீக மெய்யன்பர்கள் பொதுமக்கள்  ஏராளமானோர் கோபுர தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.