ஆவுடையார்கோயில் அருகே தென்னமாரி ஸ்ரீ கற்பகவிநாயகர்  சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே தென்னமாரி ஸ்ரீ கற்பகவிநாயகர்  சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆவுடையார்கோயில்  தாலுகா தென்னமாரி கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீசமயபுரத்துமாரியம்மன்

ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு  செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 11ம் தேதி ஞாயிற்றுகிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது, விழாவின் முக்கிய நாளான நேற்று இரண்டாம் கால யாகபூஜை நிறைவுபெற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது, அதனைத் தொடர்ந்து கணேசன், செல்வ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத  மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தென்னமாரி உள்ளிட்ட  சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ சமயபுரத்துமாரியம்மன் அருள்பெற்றுச் சென்றனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − 68 =