ஆழ்வார்குறிச்சியில் மாணவர்கள் சங்கமம் 30 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து மகிழ்ந்தனர்

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1990 முதல் 1993 வரை வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு  நடைபெற்றது.ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜி.தேவராஜன் தலைமை வகித்தார். திவான் அஹமது ஷா, ராமரத்தினம், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி, நிமிஷா இறைவாழ்த்துப் பாடினார். முன்னாள் முதல்வர் எம்.சுந்தரம், முன்னாள் பேராசிரியர்கள் ராஜாமணி, தோத்தாத்திரி, பெருமாள், சூரியநாராயணன், கல்லூரி முதல்வர் எஸ்.மீனாட்சி சுந்தரம், வணிகவியல் துறைத் தலைவர் சிசுபாலன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந் நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களுக்குப் பயிற்றுவித்த பேராசிரியர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். பேராசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.முன்னதாக ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி நிறுவனர் அனந்தராம கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆர்.எஸ்.சிவராமன் வரவேற்றார்.மாணிக்கம் நன்றி கூறினார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனியப்பன், ஜார்ஜ், போத்திராஜ், ராஜநாரா யணன், பா.பிரகாஷ், ராஜேந்திரகுமார், அருள்பிரகாஷ், அருண்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 + = 62