ஆளும் கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது-  அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. கூட்டணி தர்மத்தின்படி அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றியிருக்கிறோம். இடைத்தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கும், பொதுத்தேர்தலில் மற்றொரு கட்சி ஜெயிக்கும் என்ற வரலாறு தமிழகத்தில் உண்டு எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.  2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கான தேர்தல். ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது. ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =