ஆளுநரைக் கண்டித்து புதுக்கோட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், ஒன்றிய அரசு உடனடியாக அவரை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பதுக்கோட்டை மண்டல பொதுச்செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார், கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில  செயலாளர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன் சி.மாரிக்கண்ணு, எஸ்.யாசிந் மற்றும் தோழமைச்  சங்க நிர்வாகிகள் அ.மணவாளன், எம்.அசோகன், கி.ஜெயபாலன், டி.லட்சாதிபதி உள்ளிட்டோர் பேசினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 − 72 =