ஆலத்தூரில் துணை சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா

மீமிசல் ஆலத்தூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள மீமிசல் ஆலத்தூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் இருந்தது. அது மிகவும் பாழடைந்து இடிந்தது விழுந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அந்த துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன்,  ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், ஆலத்தூர் நீர்நிலை பாசன சங்க தலைவர் சக்திவேல் மற்றும் கிராமத்தினர் மற்றும் குணசேகரன், ஆத்மநாதன், முருகன், மீமிசல் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் துணை சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினர். இந்த துணை சுகாதார நிலையத்திற்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிதி 38 லட்சத்து, 65 ஆயிரம் ஆகும். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 5 =