ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 11ஆண்டுகளாகத் தொடர் சாதனை புரிந்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

2021-2022 கல்வி ஆண்டில் தமிழக அரசு நடத்திய தேசிய திறனறி தேர்வில் கலந்து கொண்ட 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ.1000 வீதம் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு .4 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது. மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களையும் அதிக எண்ணிக்கையில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனை நிகழ்த்த காரணமாக உள்ள ஆசிரியப் பெருமக்களையும், மாணவர்களையும், பள்ளி நிர்வாகி ஆர்.கே.அடிகளார் மற்றும் தலைமை ஆசிரியர் சூசைராஜ் இருவரும்  பாராட்டினார்கள்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற  ஷஃப்ரின்பிர்தவ்ஸ் 129 ,லாவண்யாஸ்ரீ, 128, முகமது அனஸ் 124 ஆண்ரூஸ் 119, பாண்டி116, என மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் பாராட்டும் புத்தக பரிசும் இனிப்புகளும் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =