ஆலங்குடி பணிமனை முன்பு சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆலங்குடி பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் மத்திய சங்க துணை தலைவர் மெய்யராம் தலைமையில் நடைபெற்றது. சங்க துணை பொருளாளர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளியை வெறுங்கையோடு அனுப்பாதே, ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு 80 மாத டிஏ உடனடியாக வழங்க கோரியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 11 ஆயிரம் கோடி பலன்களை உடனடியாக வழங்க கோரியும், போக்குவரத்து கழகத்தினுடைய சுழல் முறை பேச்சை உடனடியாக அமல்படுத்த கோரியும், போக்குவரத்து கழகத்தில் உள்ள வரவு செலவு வித்தியாசத்தை உடனடியாக வழங்க கோரியும், கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை நீக்கிவிட்டு புதிய பேருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் பொதுப் போக்குவரத்து பணியை செய்திட ஆள் பற்றாக்குறை உள்ளதை உடனடியாக சரி செய்திட வேண்டும்.  அதிகாரிகளின் அடாவடி தனத்தை கண்டித்தும், ஆளுங்கட்சிக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்தும் சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். தையல் சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டியன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1