ஆலங்குடி பகுதி கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சிவன் கோவில், மற்றும்   நாடியம்மன் கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி குத்து விளக்குகள், அகல் விளக்குகளில் நெய்தீபம் ஏற்றப்பட்டது.பின் அம்பாளுக்கு பல விதமான அபிஷேகங்கள் செய்து சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நட பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மஸம் வர்த்னி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் பெரிய தீபம் ஏற்றப்பட்டது.பின்னர் சாமிகளுக்கு பலவிதமான விளக்குகளால் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு கட்டப்பபட்டிருந்த சொக்கப்பானை கொளுத்தப்பட்டது.தீமைகள் அழிந்தது என பக்தர்கள் மகிழ்ச்சியில் நாமபுரீஸ்வரரைத் தரிசித்தனர்.

ஆலங்குடி சிவன் கோவிலில் பெண்கள்  மற்றும் குழந்தைகள் கார்த்திகை தீப விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்,பின்னர் சிவன் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நிகழ்வில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மேலும், குப்பகுடி வெற்றி ஆண்டவர் கோவில், கோவிலூர் சிவன் கோவில், நெம்மக்கோட்டை சித்திவிநாயகர் கோவில், கல்லாலங்குடி வரசித்தி விநாயகர் கோவில், கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில்களிலும் தீபங்கள் ஏற்றி விமர்சையாகக் கார்த்திகைத் தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1