ஆலங்குடி சென்டெனியல் லைன் சங்க  பதவியேற்பு விழா

ஆலங்குடி, சென்டெனியல் லைன் சங்கத்தின் சார்பில் பதவி ஏற்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. புதிய தலைவராக சையது இப்ராஹிம் பதவி ஏற்றுக்கொண்டார்.

செயலாளராக தாமரைச்செல்வன்,பொருளாளராக முருகேசன், பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் பொறுப்பாளர்களை மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் ஷேக் தாவூத் பணியமற்த்தி சிறப்புரையாற்றினார்.

 மண்டலத் தலைவர்  சிங்காரம்,  வட்டாரத் தலைவர் விஜயபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் வருங்கால தலைவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இறுதியில் தலைவர் சையத் இப்ராஹிம் ஏற்புரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழா ஏற்பாட்டினை முன்னாள் தலைவர் சங்கர் செய்திருந்தார். தாமரைச்செல்வன் நன்றி கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 89