ஆலங்குடி சரக காவல்,ஊராட்சி தலைவர்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியம்ஆலங்குடி சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டம் ஆலங்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு டிஎஸ்பி வடிவேல்  கூறுகையில்,

கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து முழு உத்தரவாதம் ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான் என்றும் அவர்களை பாதுகாக்க வேண்டியது அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களின் கடமை என்றும் டிஎஸ்பி வடிவேல் பேசினார். மேலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராமப்புறங்களில் ஏற்படக்கூடிய அத்துனை பிரச்சனைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்ஏதேனும்  சம்பவங்கள் நடக்கும்போது அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டால் அப்போது தகவல்களை சரியாக கூற வேண்டும் என்றும் மேலும் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக எங்களது தொலை தொடர்பு எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

டிஎஸ்பி வடிவேல்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமலதா ,மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, ஆலங்குடி சப்-இ ன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ஆறுமுகம் எஸ்பி, தனிப்பிரிவு வெங்கடேஷ் மற்றும் வடகாடு கீரமங்கலம், கறம்பக்குடி ,ரெகுநாதபுரம் ,மழையூர் ,சம்பட் டிவிடுதி ஆகிய காவல் ஆய்வாளர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 7 =