ஆலங்குடி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மேசை, நாற்காலி உபகரணங்கள் வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நேற்று முந்தினம் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சி  சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் முன்னிலையில் நடைபெற்றது. முதன்முதலாக திறப்பு விழாவை முன்னிட்டு அலுவலகத்திற்கு தேவையான மேசை நாற்காலி ஆகிய உபகரணங்கள் ஆலங்குடி இந்தியன் ரெட் கிராஸ் மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலாளர் விஸ்வநாதன் சார்பாகவும் வழங்கப்பட்டது.

 கல்லூரி முதல்வர் சேதுராமன் மற்றும் ஆலங்குடி ரெட் கிராஸ் சேர்மன் முத்தையா, செயலாளர் முருகன், பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் முத்துராமன், துணை சேர்மன் முருகேசன், துணை செயலாளர் லட்சுமி நாராயணன், மற்றும் பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணன், பாலாஜி, யோகேஸ்வரன், கோட்டை சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 24