ஆலங்குடி என்டிஎஸ் வித்தியாலயம் தட்சின பாரத ஹிந்தி பிரசார சபாவின் விசாரத் உத்ராரத் பட்டமளிப்பு விழா

ஆலங்குடி என்டிஎஸ் வித்தியாலயம் தட்சின பாரத ஹிந்தி பிரசார சபாவின் விசாரத் உத்ராரத் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் சரவணன் தலைமை வகித்தார் என்டிஎஸ் நிறுவனத்தின் ஆசிரியர் திருஞானசம்பந்தம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ஆலங்குடி ரோட்டரி சங்கத்தின் தலைவர் செல்வகுமார் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனமோகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ரமா ராமநாதன் ஹிந்தி ஆசிரியர் விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் சிவயோகாசராஜா நன்றியுரை கூறினார்.