ஆலங்குடி அருகே 2200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மூன்று சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவற்றை கடத்திய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வேங்கடகுளம் பகுதியில் இருந்து ஆலங்குடி நோக்கி வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை சோதனையிட்டதில் 1200 கிலோ ரேஷன் அரிசியை தெட்சிணபுரத்தை சேர்ந்த சேர்ந்த தமிழரசனின் மகன் வெங்கடாசலம் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது குப்பக்குடி பேருந்து நிலையம் அருகே வந்த அசோக் லேலாண்ட் தோஸ்த் வாகனத்தில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஆலங்குடியை சேர்ந்த முத்து சிதம்பரம் மகன் ரமேஷ், மனவிடுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு டூவீலரில் 100 கிலோ அரிசி கடத்திய பொன்னமராவதி நெருஞ்சிகுடி மணிகண்டன் வழக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளிக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =