
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி அரசின் உத்தரவை மதித்து விநாயகர் சிலையை வீடுகளில் வைத்து சிறுவர்கள் வழிபட்டனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா கட்டுப்பாட்டால் ஆடம்பரங்கள் இன்றி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்த தடை விதித்துள்ளது.
மேலும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த எந்த வித தடையில்லை என்று அரசு கூறியுள்ளது. இந்த காரணத்தால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர்கள் தங்களது வீடுகளிலேயே களிமண்ணால் தங்கள் கைகளாலேயே மிக நேர்த்தியாக வடிவமைத்து குட்டி குட்டி விநாயகர் சிலைகளை உருவாக்கி அதற்கு குடில் அமைத்து அதில் வழிபாடு நடத்தினர்.