ஆலங்குடி அருகே விஷ பாம்பு கடித்து மருத்துவமனையில் இருவர் அனுமதி

ஆலங்குடி, செட்டிகுளம், வடகரை கம்பர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மாரியம்மாள் (47 ). இவர் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஐயப்பன் கோவில் பகுதியில் குப்பைகளை அள்ளும்போது குப்பையில் இருந்த பாம்பு கடித்து விட்டது.

இதைப்பார்த்த சகதூய்மை பணியாளர்கள் உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்வம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதேபோல், ஆலங்குடி அருகே உள்ள மனக்கொல்லையை சேர்ந்தவர் சூசை மகன் சேசு (62). இவர் அப்பகுதியில் உள்ள வயலில் வைக்கோல் கட்டி ஏற்றும்போது வைக்கோலில் சுருட்டி இருந்த பாம்பு காலில் கடித்தது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + = 11