புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கோடை கலை இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி தலைமையில் நடைபெற்ற கோடை கலை இலக்கியத் திருவிழாவில் பள்ளி மற்றம் கல்லூரி மாணவ, மாணவிகள் 200 பேர் கலந்துகொண்டனர். வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டன.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா, மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாவட்டத் தலைவர் ராசி. பன்னீர்செல்வன், பொருளாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருப்பையன், கவிஞர்கள் வடிவேல், வம்பன் செபா, தமிழரசன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களைப் பாராட்டினர். கிளை செயலாளர் மு.ராஜா, பொருளாளர் தங்கதிருப்பதி, அறிவொளி கருப்பையா, ஏ.கே.குமரேசன், ஓவியர் சேரன், எஸ்.பிரபாகரன், டி.தமிழ்குமரன், மனோன்மணி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.