ஆலங்குடி அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கீரமங்கலத்தில் மின்சாரம் தாக்கி 2 நபர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த இருவர் குளிப்பதற்காக சென்றுள்ளனர் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவர்கள் இருவரும் மழை விட்ட பின்பு குளிக்கலாம் என்ற நோக்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அந்நேரத்தில் மின்னலுடன் மழை பெய்ததாக தெரியவருகின்றது அப்போது அருகிலிருந்த கம்பி வேலியை இருவரும் பிடித்துள்ளனர் அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே
அண்ணாநகர் ராமன் என்பவரின் மகன் குமாரவேல், பெரியார் நகர் சின்னையா என்பவரின் மகன் சுந்தரம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதனை தூரத்திலிருந்த பார்த்தோர் காவல்துறைக்கும் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு துறை அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு மின்சாரத்தை நிறுத்தியவுடன் வேறு யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.குளிப்பதற்காக சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது இருவரின் உடலை மீட்ட போலீசார் துறை ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 + = 81