ஆலங்குடி அருகே மது விற்ற இருவர் கைது .  

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக ஆலங்குடி  காவல் துணைக் கண்காணிப்பாளர் வடிவேல்-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே தகவலின் அடிப்படையில் அவரது தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.   அதன்பேரில் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது புதுக்கோட்டைவிடுதி அரசு மது பானக்கடை எதிரே உள்ள கடையின் அருகில் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மகேந்திர ராஜா (23)  மற்றும் அரசடிப்பட்டி கீழத்தெரு ராமச்சந்திரன் மகன் ராசு(48), ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் இருவரிடமிருந்து 20 மது பாட்டில்களும்,  2,037   ரூபாயையும் கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் இருவரையும் ஆலங்குடி காவல் நிலையம் கொண்டுசென்று வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை  நடத்தி வருகின்றனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

87 + = 90