ஆலங்குடி அருகே மதுபோதையில் தகராறு ஒருவா் அடித்து கொலை

ஆலங்குடி அருகே மதுபோதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தில் விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த அய்யாசாமி மகன் முருகன் (30), தனசேகர்(29),தங்கசாமி(53) ஆகிய மூவரும் கட்டிட வேலைக்காக கீரமங்கலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனா்.

இந்நிலையில் முருகன், தனசேகர், தங்கசாமி மூவரும் கீரமங்கலம் வந்து மது அருந்திவிட்டு செல்லும் பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முருகன் தனசேகரனை தகாத வார்த்தையில் திட்டியதாகவும்  அதில் கோபம் அடைந்த தனசேகர் அருகே கிடந்த கட்டையை எடுத்து முருகனை அடித்ததில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார், சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீசார், தனசேகர் மற்றும் தங்கசாமி இருவரையும் கைது செய்தனா், மேலும்  முருகன் உடலை  மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =