ஆலங்குடி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிக்கப்பட் டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில்  பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் பேரணி நேற்று நடைபெற்றது. 

விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஷோபா புஷ்ப – ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய- மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து ஏடி காலனி வரை சென்றது. பள்ளி மாணவ மாணவிகள் பதாதகை ஏந்தியபடி பிளாஸ்டிக் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்போம் என கோஷமிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணியில் சத்துணவு அமைப்பாளர் பத்மா, சுய உதவிகுழு ஜெயா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதார இயக்குணர்கள், ஊரா ட்சி துப்புரவு பணியாளர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.  நிறைவாக ஊராட்சி செயலர் சித்ரா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + = 24