புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி ஸ்ரீமுத்து முனிஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு 55 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது .ஜல்லிக்கட்டு போட்டியில் 600காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதிமொழியை ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் ஏற்றி வைத்தார்,புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன, அதனை அடக்க வீரங்கள் முயன்றனா், ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 28 பேர் காயம் அடைந்தனர், காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்.