ஆலங்குடி அருகே சித்திரை முதல் நாள் நல்ஏா் பூட்டிய விவசாயிகள்

தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி,விளைநிலத்தை உழுது விதை விதைத்து வழிபட்டால் அந்த ஆண்டு மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நெடுங்கால நம்பிக்கை. இந்நிலையில்,  நிகழாண்டு சித்திரை முதல் நாளான இன்று ஆலங்குடி கறம்பக்குடி பகுதிகளான  எஸ்.குளவாய்ப்பட்டி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, வடகாடு, மாங்காடு, அணவயல், செரியலூர், மேற்பனைக்காடு, மாங்கோட்டை,வாராப்பூா்,மழையூா்  உள்ளிட்ட பகுதியில்  விவசாயிகள், காலையில், விளைநிலத்தில் படையலுடன், காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி நல்லேர் பூட்டி விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கினர்.

ஒன்றுகூடி விளைநிலத்தில் படையலுடன் வழிபாடு நடத்தினர். தொடரந்து, இரண்டு  காளை மாடுகளில் ஏர்பூட்டி உழவைத்தொடங்கினர், பல இடங்களில் காளைகள் இல்லாததால், டிராக்டரை கொண்டு உழுது சித்திரை முதல் நாள் வழிபாட்டில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

40 − = 34