ஆலங்குடி அருகே சாலை பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜான் மார்ட்டின் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருட்சகோதரி பக்சி மெட்டில்டா வரவேற்றார், கருத்தரங்கில் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் நல்லதம்பி, நகர வட்டார போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர், இந்தியன் ரெட் கிராஸ் ஆலங்குடி கிளை சேர்மன் மருத்துவர் முத்தையா, பொருளாளர் ஜெயச்சந்திரன்,துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், துணைப் பொருளாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் சிவ.ஆனந்தன், அருட்சகோதரி மார்கரேர் மேரி ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினர், நிகழ்ச்சியின் முடிவில் இன்னாசிமுத்து நன்றி கூறினார்.