ஆலங்குடி அருகே சமுதாய வளைகாப்பு விழா

புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சந்தைப்பேட்டையில் நேற்று  நடைபெற்றது

வளைகாப்பு நிகழ்ச்சியானது குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேற்பார்வையாளர் கலையரசி தலைமையில் நடைபெற்றது.ஆலங்குடி சந்தைப்பேட்டையில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.சமுதாய வட்டார சுகாதார அலுவலர் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கி கூறினார்.

மேலும் 50-க்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு  வளைகாப்பு,மாலை அணி வித்து சந்தனம்பூசி, மரியாதை செய்யப்பட்டது.இதனையடுத்து குங்குமம், மஞ்சள், வளையல், பூ, அடங்கிய பரிசு வழங்கி ஐந்து வகையான உணவுகளுடன் அன்னதானம் நடைபெற்றது. பின்னர் வட்டார மருத்துவ அலுவலர்கள்,கர்ப்பிணிகளை சோதித்து ஆலோசனைகள் மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − = 13