ஆலங்குடி அருகே கிராவல் குவாரி குளத்தில் விழுந்து ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு அறையப்பட்டியைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் சேகர்(47). இவர் ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது மனைவி சரோஜாவிடம் காய்கறி வாங்கி வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்த நிலையில், அரையப்பட்டி அருகிலுள்ள குவாரி குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

92 − 82 =