ஆலங்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கத்தக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் ஆலங்குடி தாலுகா, வேங்கிடகுளம் பீட்டர் மகன் ரெத்தினம் ஆண்ட்ரோ (28).

இவரது தாய் பபியோலா மற்றும் தந்தை ஆகிய இருவருமே அரசு பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக ரெத்தினம் ஆண்ட்ரோவுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முந்தினம் தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தனியாக இருந்த ரெத்தினம் ஆண்ட்ரோ சேலையால் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மதிய உணவு சாப்பிட வராததால் அவரது பெற்றோர்கள். நேற்று முந்தினம் மாலை சுமார் 4 மணியளவில் மாடியில் பார்த்தபோது இறந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆலங்குடி போலீசார் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை  வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 + = 75