ஆலங்குடி அருகே காவல்நிலையம் முற்றுகை கொம்புக்கார சுவாமி கோயில் விழா விஸ்வரூபம்!

ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் பட்டவையா கொம்புக்கார சுவாமி கோயில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், இந்த கும்பாபிஷேகத்தில், பெரிய தாணன், சின்ன தாணன், சிவந்தான், ஏகன் ஆகிய நான்கு கரைகாரர்களும் சேர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளனர்.

ஆனால், 48 நாட்கள் நடைபெற்ற அபிஷேக ஆராதனை விழாக்களில், சிவந்தான், ஏகன் ஆகிய இரு கரைகாரர்களை அபிஷேக ஆராதனைக்கு அழைக்காததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவந்தான், ஏகன் ஆகிய இரு கரைகாரர்கள் பால்குடம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்த திட்டமிட்டுருந்தனர். இதனால், இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானது.

இதைத்தொடர்ந்து, தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில், போலீஸ் டி.எஸ்.பி., தீபக் ரஜினி முன்னிலையில் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால், பால்குடம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏற்படாததால், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சிவந்தான், ஏகன் ஆகிய இரு கரைகாரர்கள் கீரமங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாகச் சென்று கீரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தினால் இதற்கு முடிவு வரும் என்ற நிலை நீடிப்பதால், அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =