புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் மகள் பவித்ரா (20), இவா் புதுக்கோட்டை அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தார், இவரது எதிர் வீட்டைச் சேர்ந்த கருப்பையா மகன் துரைக்கண்ணு(30) கட்டுமான தொழிலாளியான இவர், பவித்ராவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் துரைக்கண்ணு பவித்ராவுக்கு சித்தப்பா உறவுமுறை என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் , பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த பவித்ராவோடு, துரைக்கண்ணு சண்டை போட்டுள்ளார்.தொடர்ந்து, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, துரைக்கண்ணு தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி காவல் ஆய்வாளா் ஆழகம்மை வழக்குபதிவு செய்து பவித்ரா உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும்,துரைக்கண்ணு உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பாரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.