புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது, ஜல்லிக்கட்டில் 610 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியை விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மெட்டல் , அயூப்கான், திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உறுதிமொழி வாசித்தார்.
புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன, ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டுக்கடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, எவர்சில்வர் பாத்திரம் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காயமடைந்த 23 வீரர்களுக்கு உடனடியாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் மேல்கிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வாடிவாசலில் இருந்து வெளியேறி ஓடும் போது உயா் அழுத்த மின் கம்பத்தில் மோதியதால் அதில் கம்பிகள் உரசி தீப்பொறியாக கீழே பார்வையாளா்கள் மீது விழுந்தது, இதில் 15 போ் காயமடைந்து ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.