ஆலங்குடி அருகே கணவரால் கைவிடப்பட்ட பெண் 4 ஆண்டு காலமாக மாவட்ட கலெக்டர் மனுநீதி முகாமில் மனுகொடுத்தும் இலவச தையல் இயந்திரம் இதுவரை வழங்கவில்லை என மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலூகா மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட களபம் ஊராட்சி தோப்புகொல்லை கிராமம் முத்துவேல் மகன் ஆனந்தன். இவர் 2013ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது மனைவி ராணி(33) 2 குழந்தைகளுடன் தினசரி கூலி வேலை செய்து வருகிறார்.
கணவரால் கைவிடப்பட்ட ராணி கணவர் ஆனந்தன் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் ஆதார் அட்டையுடன் கடந்த 2013 ஆண்டுகளில் தாலுகாவில் பெறப்பட்டு வைத்துள்ளார். இந்நிலையில் ராணி கடந்த 2015-16ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட திட்ட மேலாளர் புதுவாழ்வு திட்டம் ஏழை மகளிரை குடும்ப தலைவரை கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு புதுவாழ்வாதாரத் திட்டப்பயிற்சி 2015-16ல் புதுக்கோட்டை ராஜா தையற்பயிற்சி நிறுவனத்தில் முறையாக தையற் பயின்று சான்றிதழ் வைத்துள்ளார்.
கணவரை இழந்த ராணி கடந்த 8 ஆண்டுகளாகி விட்டநிலையில் முதியவரான மாமனார் மற்றும் குழந்தைகளுடன் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன், எனக்கு தையற்பயிற்சி சென்று அதற்க்கான உருளை சீட்டை வைத்து அரசாங்கம் தரும் இலவச தையல் இயந்திரம் கேட்டு 2017ம் ஆண்டிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மணு கொடுத்துவருகிறேன். ஆனால் என்னை பலமுறை மனுநீதி முகாமில் மனு கொடுக்க வைத்து எந்த பயனும் இல்லை. என்னால் அழைய முடியவில்லை. ஆகையினால் தயவுகூர்ந்து எனக்கு இலவச தையற் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் கவிதாராமுவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.