
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பள்ளத்திவிடுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து(48). இவரது மகள் பாரதி பிரபா(19) ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள அவரது மாமா நடேசன் வீட்டில் கடந்த 20 நாட்களாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் பாரதி பிரபாவை, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாரதி பிரபா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற ஆலங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.