ஆலங்குடி அருகே இலவச  கண் பரிசோதனை முகாம்

ஆலங்குடி அருகே உள்ள அனாவயல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது

அறம்  அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 20 ஆம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.

முகாமில் 560 வெளி நோயாளிகள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.  அதில் 260 பேர் கண் புரை அறுவை சிகிச்சை செய்ய மதுரை  அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமினை எல்.என்.புரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராணி சின்னத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வி முருகேசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் , அறம் அறக்கட்டளை தலைவர் கணேசன், உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஆசிரியர் இராஜ.பாவெல், டிட்டோ ஆசிரியர் பாஸ்கர், ஆசிரியர் ரகு.மார்க்கண்ணன், சங்கர் , புஷ்பராஜ், அணவயல் பாரத் பால் நிறுவனத்  தலைவர் கணேசன், பங்குதாரர் காசிநாதன், ராஜாக்கண்ணு, அருணாசலம் அய்யாவு, ஆடிட்டர் வைத் திலிங்கம், சோமசுந்தரம் முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி லயன்ஸ் கிளப் உறுப்பினர் வை. சுப்பையன் மற்றும் உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு உணவளித்து முகாமிற்கு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

52 + = 60