புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக திருவரங்குளம் ஒன்றியத்தி ற்குட்பட்ட நெடுவாசல் மேற்கு ஊராட்சியை சேர்ந்த குருவாடி ஆதிதிராவிடர் காலனி 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் காலணி வீட்டுமனைப்பட்டா போக மீதமுள்ள 60 சென்ட் இட த்தில் குடியிருந்து வரும் சுமார் ஏழு நபர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்பது குற்றச்சாட்டாகும்.
இதனை அடுத்து தற்போது அப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அர சால் அனுமதி கிடைத்திருப்பதாகவும் அதற்கு போதிய இடவசதி இல்லாத தால் ஆக்கிரமிப்பு செய்துள்ள 60 சென்ட் இடத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசல் மேற்கு பஞ்சாயத்து ஆறாவது வார்டு குருவாடி உறுப்பினர் சாவித்திரி அவரின் கணவர் ரகு, மாமனார் கோவிந்தராஜ் ஆகியோர் வடகாட்டில் இருந்து பேராவூரணி செல்லும் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் வடகாடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் மாவட்ட எஸ்பி தனிபிரிவு முருகேசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் பஸ் மறியல் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.