தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசர்குளம், கீழ்பாதி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அரசர்குளம், கீழ்பாதி ஊராட்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதனின் அறிவுறுத்தலின் படி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் திமுக மாவட்ட கவுன்சிலர் சரிதா மேகராஜன் தலைமையில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி பார்சல் வழங்கியதோடு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உணவும் பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்
நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார், சிட்டங்காடு ரவி, ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, கொடிவயல் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் மன்னகுடி சோமு, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.