ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம்

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய  மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார்.

செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி வரவேற்றார். மருத்துவர் சாந்தினி முன்னிலை வகித்தார். இதில் மருத்துவர்கள் ,கார்த்திக்குமார், மணிவண்ணன், கீதா மருத்துவமனை  செவிலியர்கள் செல்வமணி, சிரேகா, கீதா, விண்ணரசி, ஜான், மருந்தாளுநர்கள் சிரைச்செல்வன், சிவசங்கரி அலுவலக எழுத்தர் சக்கரவர்த்தி மற்றும் அனைத் து  ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்களுக் கு நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்பு தனது தலைமை உரையில் மருத்துவர் பெரியசாமி தேசிய மருத்துவர் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜீலை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது  டாக்டர் பி.சி.ராய் பிறந்த நாளை குறிப்பதாகும். இந்நாள் தன்னலம் கருதாமல் மருத்துவசேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் மக்களின் முன்னேற்றத்திக்கு அறும் பணியாற்றும் மருத்துவர்களை சிறப்பிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது,

மருத்துவம் என்பது மருத்துவர்,செவிலியர் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் கூட்டுமுயற்சி, அதை நாம் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று கூறினார். மருத்துவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா காலத்தில் ஆற்றிய சேவை மிகவும் போற்றுதலுக்குறியது. அக்காலத்தில் பல மருத்துவர்களை  கொரானா பாதிப்பால்  இழந்திருக்கிறோம். அவர்களுக்கு இந்நாளில் மரியாதை செலுத்துவோம். மருத்துவர்களின் பணி சிறக்க  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். முடிவில் மருத்துவர் லிபர்த்தி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =